WELCOME

வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றியதகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

Thursday, January 5, 2012

Ayya Vazhi History


அய்யா வைகுண்டப் பரம் பொருள்


அய்யா வைகுண்டப் பரம் பொருள்

அருளிய அறிவுரைகள்.
தொகுப்பு: ஆ. மணிபாரதி
 
விளக்கின் ஒளிபோல் வீரத்தமாய் இருங்கள்  தான் பெரிதென்று தப்புமிகச் செய்யாதுங்கோ வான் பெரிதென்று மகிழ்ந்து இருந்திடுங்கோ அடிபணிய வென்று அலைச்சல் மிகச் செய்யாதுங்கோ குடிபொருந்தி வாழ்ந்து கூடி இருந்திடுங்கோ நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திடுங்கோ இல்லறத்தை விட்டுதவம் இல்லைகான் வேறு வொன்று ஆணுக்கொடு பெண் அன்றூழி காலமெல்லாம் வாழ்ந்திருப்போர் என்றும் மக்கள் கிளையோடு பேரு தழைக்கப் பெருமையாய் வாழ்ந்திருப்பார் அமர்ந்து நீ போனால் அதிகபலன் உண்டாகும் சுமந்த பற்பதத்தின் சுகம் பெற்று நீவாழ்வாய் அறத்தழைக்க நன்றாய் அதுகுதிக்கும் என்று சொல்லு மாழுவது மாண்டு மனதுக்கு உகந்ததே முழிக்கும் முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும் சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும் பொய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே மும்முதலோன் ஆகி முறை நடத்து என்மகனே சிரமானது விரித்துச் சிறைபோல் இருமகனே மகாபரனை நெஞ்சில் மறவாதே எப்போதும் கொண்டை அழுது உண்டு குவிந்துயிரு என்மகனே நானீயே அல்லாமல் நடப்பு வேறில்லை உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே எனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான் சிவனும் நீ நாதனும் நீ திருமாலும் நீ மகனே தானானாய் நீயும் தலைவனும் நீ என்மகனே ஏதுவினை செய்தாலும் எண்ணம் வையாதேயென் மகனே தாழ்ந்துயிரு என்மகனே சட்டைக்குள்ளே பதுங்கி கோபமாள் பேசாதே குவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே பராக்கிரமம் காட்டாதே ஆக்கிரமம் எல்லாம் அடக்கியிரு என்மகனே தாக்கிறவன் ஆகிடினும் சற்றும் பகையாதே பொல்லாதார் ஆகிடினும் போதப் பகையாதே வாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே சாரம் அறிந்து தானுரை நீ சொல்லுரைகள் ஆய்ந்து தெளிந்து அருளுனீ என்மகனே ஏந்து நீ தர்மம் இடறு நினையாதே நில்லு நினைவில் நீ சரித்துக்கொடு என்மகனே சரித்துக்கொடு என்மகனே சற்றும் மலங்காதே ஒருவரோடும் பிணங்கி உரையாதே என்மகனே வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே ஏழையாய் இரு நீ என்னுடைய கண்மணியே பொறுதி தான் என்மகனே பெரியோராய் ஆகுவது பொறுமை பெரிது புவியாள்வாய் என்மகனே தூலம் உரையாதே துலங்கும் நாள் ஆகுமட்டும் எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே வலியோரைக் கண்டு மகிழாதே என்மகனே தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம் மாளக் கிடப்பார் மதத்தோர்கள் என்மகனே சாதியொரு நிரப்பாய்த் தானாள் வாய் என்மகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே பொல்லாதா ரோடும் பொறுமையுரை என்மகனே தன்னாலே ஆகுமட்டும் சாற்றியிரு என்மகனே விள்ளாத ஞாயம் மேல் ஞாயம் என்மகனே துள்ளாத யானை துடியானை என்மகனே அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே நன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே அண்டின பேரை அகற்ற நினையாதே ஆபத்தைக் காத்து அகல நீ தள்ளாதே சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும் கொபத்தைக் காட்டாதே கோளோடு இணங்காதே பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே பசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே விசுவாசம் அதிலே விரோதம் நினையாதே எளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு நீ அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே தொட்டுப் பிடியாதே தோர்வை வைத்துக் காணாதே விட்டுப் பிடியாதே வேட்கமதைக் காணாதே வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே பரம்பூமி கண்டு பாவித்திரு என்மகனே சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும் நட்டங் காணாதே நாடாள்வாய் என்மகனே பதறியிரு என்மகனே பம்மியிரு என்மகனே அப்பனே பம்மலிலே அகப்படுங்கண் இக்கலியும் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே முன்னம் வகைக்காரனோடு மோதிப் பகையாதே தாழ்ந்திருக்க என்றால் சர்வதுக்கும் தாழணுமே ஒர்ந்திருக்க என்றால் ஒருவர் பகை ஆகாது மெலியோர்க்கு ஒருவழக்கு வீணாய்ப் பகையாதே சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே வஸ்து வகை பெண்வகை என்றெண்ணாதே சத்துரு வோடும் சாந்தமுடனே இரு புத்திர ரோடும் பேசியிரு என்மகனே அன்போர்கும்  ஈயு ஆகாதபோகும் ஈயு வம்போர்கும் ஈயு வழிப்போக்கோருக்கும் ஈயு ஆர்கும் மிக ஈந்தால் அந்த தர்மமே கொதிக்கும் போர்க்கு நினைத்தோரைப் பலிகொடுக்கும் தர்ம மது தர்மந்தாண் வாழும் சக்கரங்கள் அல்ல நீதி அழியாதே நீ சாபம் கூறாதே சட்டம் மறவாதே சாஸ்திறத்துக்கு உற்றவனே பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிவிடு வேண்டா இறைகள் வேண்டாமென்று சொல்லிவிடு காணிக்கை வேண்டாதுங்கே கைக்கூலி கேளாதுங்கோ பூஜைஏராதுங்கோ பலிதீபம் ஏடராதுங்கோ ஆசை வையாதுங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ ஞாய முறைதப்பி நன்றி மறவாதுங்கோ மாய நினைவு மனதில் நினையாதுங்கோ மோதிப் பேசாதுங்கோ மோகம் பாரட்டாதுங்கோ விழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ கூவென்று பேசாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ தீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ நிலையழியா துங்கோ நீதியாய் நின்றிடுங்கோ கருதி இருங்கோ கருத்து அயர்ந்து போகாதுங்கோ நல்லோரே ஆகவேன்றால் நியாயம் அதிலே நில்லும் அல்லாமல் மீறி யாதொருவர் செய்த்துண்டால் வல்லாத்தான் வைகுண்டருக்குப் பொல்லாத கோபம் வரும்

No comments:

Post a Comment